செய்திகள்
பாஜக கொடி, சின்னம்

ம.பி.யில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்றிரவு பதவியேற்பு

Published On 2020-03-23 11:26 GMT   |   Update On 2020-03-23 11:26 GMT
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போபால்:

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார்.

மற்றவர்களின் ராஜினாமா கடிதங்களையும் ஏற்றதாக பின்னர் அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்தது. கமல்நாத் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.



ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சமீபத்தில் சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, இன்றிரவு 7 மணியளவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல் மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Tags:    

Similar News