செய்திகள்
சுப்ரீம் கோர்ட், டெல்லி

கொரோனா தாக்கம்: சுப்ரீம் கோர்ட் வளாகத்தை சீல் வைக்க முடிவு

Published On 2020-03-23 07:56 GMT   |   Update On 2020-03-23 07:56 GMT
டெல்லியில் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்துள்ள நிலையில் வழக்கறிஞர்களின் அறைகள் உள்பட சுப்ரீம் கோர்ட் வளாகத்தை சீல் வைப்பது தொடர்பாக தலைமை நீதிபதி ஆலோசித்து வருகிறார்.
புதுடெல்லி:

கொடிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 14 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்து, பலி எண்ணிக்கையும் 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா பீதி அதிகரித்துள்ள நிலையில் வழக்கறிஞர்களின் அறைகள் உள்பட சுப்ரீம் கோர்ட் வளாகத்தை சீல் வைப்பது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆலோசித்து வருகிறார்.



சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அதிகமான நடமாட்டத்தை தவிர்க்கும் வகையில் நாளை மாலைக்குள் வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைப்பது, வழக்கறிஞர்களுக்கு நுழைவு அனுமதி அடையாள அட்டைகளை தற்காலிகமாக ரத்து செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இனி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் கோர்ட்டின் வழக்கமான கோடை விடுமுறையை இந்த ஆண்டு முன்கூட்டியே அறிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News