செய்திகள்
குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டதை கொண்டாடிய மக்கள்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்

Published On 2020-03-20 03:12 GMT   |   Update On 2020-03-20 03:12 GMT
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டதை உத்தர பிரதேசத்தில் பொதுமக்கள் சிலர் மேளதாளம் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர்.
பாலியா:

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்த நிலையில், கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

ஆனால், தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்திலும் குற்றவாளிகள் தரப்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களும் கடைசி நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, இன்று காலை 4 குற்றவாளிகளும் டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். குற்றம் நடந்து 7 ஆண்டுகள் 3 மாதங்களுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 



குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்ட செய்தி வெளியானதும், சிறை வாசலில் கூடியிருந்த மக்கள், நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். சில இடங்களில் இதனை உற்சாகமாக கொண்டினர். உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மேளதாளம் முழங்க ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடினர்.

இது தனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் கூறினார்.
Tags:    

Similar News