செய்திகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

நிர்பயா வழக்கு - குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை உறுதி

Published On 2020-03-19 18:26 GMT   |   Update On 2020-03-19 18:26 GMT
நிர்பயா வழக்கு தொடர்பாக தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் நாளை காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால்  தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர்.

அவ்வகையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், சம்பவம் நடந்த அன்று தான் டெல்லியில் இல்லை என்ற வாதத்தை கீழ் நீதிமன்றங்கள் தவறாக நிராகரித்துவிட்டதாக கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்காமலேயே, இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் அதிகாலை 5.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள தூக்கு தண்டனை நிறுத்திக் கோரி மன செய்திருந்திருந்த நிலையில், நிர்பயா குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.  மேலும் குற்றவாளிகளின் மனுவை கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதன் மூலம் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளும் முடிந்து விட்டதால் நாளை காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவது உறுதியானது.
Tags:    

Similar News