செய்திகள்
சித்தரிப்பு படம்

திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது

Published On 2020-03-17 15:07 GMT   |   Update On 2020-03-17 15:07 GMT
மருத்துவரீதியாக பெண்கள் தேவையற்ற கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்கும் திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
 
அந்த முடிவுகளில் ஒன்றாக, 1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கருக்கலைப்பு செய்வதற்கான கர்ப்பக்கால வரம்பை சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்துவதற்கு இந்த சட்டத்திருத்தம் அனுமதி வழங்குகிறது.

பாலியல் பலாத்கார சம்பவங்களில் உயிர் தப்பியவர்கள் மற்றும் பிறபாதிப்புகளுக்கு இலக்கான பெண்கள் இவர்களில் அடங்குவர்.



இந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மருத்துவரீதியாக பெண்கள் தேவையற்ற கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்கும் திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா (2020) பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.
Tags:    

Similar News