செய்திகள்
சர்வதேச நீதிமன்றம் (கோப்பு படம்)

வெள்ளிக்கிழமை தூக்கு... சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்ற நிர்பயா குற்றவாளிகள்

Published On 2020-03-16 11:32 GMT   |   Update On 2020-03-16 13:50 GMT
வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் தங்களுக்கு வழங்கப்பட உள்ள தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  முகே‌‌ஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளையும் வரும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு (மார்ச் 20) தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ்குமார் சிங் தனது முன்னாள் வழக்கறிஞர் அனைத்து சட்டவாய்ப்புகளையும் பயன்படுத்தவில்லை எனவும் ஆகையால் தனக்கு அனைத்து சட்டவாய்ப்புகளையும் பயன்படுத்த வாய்ப்பு தரும்படியும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 



இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டுவிட்டது எனவும் இனி சட்டவாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

இதனால் நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட உள்ள தூக்குதண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளனர். குற்றவாளிகளில் முகேஷ் குமாரை தவிர எஞ்சிய 3 பேரும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
Tags:    

Similar News