செய்திகள்
வைரல் விளம்பர பதாகை

டைம் டிராவல் மூலம் 1400 ஆண்டுகள் முன்னோக்கி செல்ல இந்த மதத்திற்கு மாறுங்கள் - வைரலாகும் விளம்பர பதாகை

Published On 2020-03-16 04:24 GMT   |   Update On 2020-03-16 04:24 GMT
டைம் டிராவல் செய்து 1400 ஆண்டுகள் முன்னோக்கி செல்ல இந்த மதத்திற்கு மாறுங்கள் என்ற தகவல் அடங்கிய விளம்பர பதாகை புகைப்படம் வைரலாகி வருகிறது.



சர்ச்சயை ஏற்படுத்தும் தகவல் அடங்கிய விளம்பர பதாகை ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்ச்சைக்குரிய விளம்பர பதாகை ஆஸ்திரேலியாவில் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 



சர்ச்சையை ஏற்படுத்தும் விளம்பர பதாகையில், "டைம் டிராவல் செய்ய விருப்பமா? இஸ்லாம் மதத்திற்கு மாறினால், 1400 ஆண்டுகள் முன்னோக்கி செல்லலாம்!" என எழுதப்பட்டுள்ளது. இதே தகவல் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, இது ஆஸ்திரேலியாவில் உள்ள உண்மையான விளம்பர பதாகை இல்லை என தெரியவந்துள்ளது. வைரல் விளம்பர பதாகையில் வெவ்வேறு வாசகங்கள் அடங்கிய பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. 


மேக்ஸ்வீட் செயலி கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பர பதாகை

இந்த விளம்பர பதாகை மேக்ஸ்வீட் (Makesweet) எனும் செயலியை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் உள்ள விவரங்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News