செய்திகள்
செல்போன் மீதான ஜி.எஸ்.டி. வரி 6 சதவீதம் அதிகரிப்பு

செல்போன்கள் மீதான வரியை 18 சதவீதமாக உயர்த்த ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் முடிவு

Published On 2020-03-14 13:05 GMT   |   Update On 2020-03-14 13:05 GMT
டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் தலைமையில் இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் செல்போன்கள் மீதான வரியை 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.
புதுடெல்லி:

மத்திய அரசின் சரக்கு சேவை வரி தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை வரையறுப்பதற்காக மாதந்தோறும் டெல்லியில் மத்திய நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

சில பொருட்களுக்கு வரியை குறைத்தும் சிலவற்றுக்கு உயர்த்தியும் மேலும் சில தயாரிப்புகளுக்கு வரியை ரத்து செய்யவும் இந்த குழு பரிந்துரை செய்யும்.



இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற  ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் செல்போன்கள் மற்றும் அவற்றின் சில உதிரிபாகங்கள் மீதான வரியை 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News