செய்திகள்
என்.பி.ஆருக்கு எதிரான பேரணி

என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Published On 2020-03-13 12:31 GMT   |   Update On 2020-03-13 13:09 GMT
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக டெல்லி சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.
புதுடெல்லி:

மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளும் ஆட்சேபணை தெரிவித்து வருகின்றன. 

இதற்கிடையே, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழக அரசும் என்.பி.ஆர். குறித்து சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதற்கு பதில் கிடைக்காத வரை என்.பி.ஆரை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபையில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு  மாநில மந்திரி கோபால் ராய் இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய மந்திரிகள் யாராவதுஅரசு முகமையில் இருந்து பிறப்பு சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளதா என்பதை காட்டுவார்களா? எனது குடும்பம் மற்றும் அமைச்சரவையில் உள்ளோருக்கே பிறப்பு சான்றிதழ் இல்லை. எங்களை தடுப்பு முகாமில் வைப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News