செய்திகள்
பாராளுமன்றம்

எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

Published On 2020-03-11 06:05 GMT   |   Update On 2020-03-11 06:05 GMT
பாராளுமன்றத்தில் இன்று பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
புதுடெல்லி:

பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே, டெல்லி வன்முறை தொடர்பாக உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கின. அவையின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. இன்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் கொடுத்திருந்தனர். ஆனால் அவை ஏற்கப்படவில்லை. இதனால், டெல்லி வன்முறை மற்றும் 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. 

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12.30 மணி வரையிலும், மாநிலங்களவை 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் நடைபெறும் விவாதத்திற்கு உள்துறை மந்திரி அமித் ஷா மாலை 5.30 மணயளவில் பதிலளிக்க உள்ளார். 
Tags:    

Similar News