செய்திகள்
சபரிமலை

சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் - தேவசம்போர்டு அறிவுறுத்தல்

Published On 2020-03-10 12:13 GMT   |   Update On 2020-03-10 12:13 GMT
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: 

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
 
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதற்கிடையே, கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சபரிமலையில் பக்தர்கள் வரவேண்டாம் என திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலையில் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட அனைத்து கோவில்களும் மக்கள் திரளாக கூடும் சிறப்பு பூஜைகளை ரத்து செய்ய வேண்டும். இது குறித்து சபரிமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News