செய்திகள்
மும்பை பங்குச்சந்தை

10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி- அதல பாதாளத்திற்கு சென்றது சென்செக்ஸ்

Published On 2020-03-09 10:56 GMT   |   Update On 2020-03-09 11:56 GMT
கொரோனாவின் தாக்கம், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் இன்று 1941 புள்ளிகள் சரிவடைந்தன.
மும்பை:

கொரோனா வைரஸ் சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலை, எச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவை பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது. இதன் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. இந்திய பங்குச்சந்தைகளில் இந்த பீதியுடன், யெஸ் வங்கியின் நிதி சிக்கலும் சேர்ந்ததால் பங்குச்சந்தைகள் இன்று அதல பாதாளத்திற்கு சென்றன. 

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் 2000க்கும் அதிகமான புள்ளிகள் வரை சரிந்தது. இது 2010ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் கடுமையாக வீழ்ச்சி கண்டது. அதன்பின்னர் சந்தைகள் சற்று ஏற்றமடைந்தன.



வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 1941.67 புள்ளிகள் சரிந்து, 35,634.95 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 538 புள்ளிகள் சரிந்து 10451  என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது. 

ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வேதாந்தா, ஜீ என்டர்டெயின்மென்ட், இந்தஸ்இந்த் வங்கி, டிசிஎஸ், எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் 9.95 சதவீதம் முதல் 14.07 சதவீதம் வரை சரிந்தன. 

இன்றைய வர்த்தகத்தின்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 11 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்தன. இந்த வகையில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்துள்ளன. 

இது ஒருபுறமிருக்க, நிதி சிக்கலில் உள்ள யெஸ் வங்கியின் பங்குகள் 30.56 சதவீதம் உயர்வு கண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News