செய்திகள்
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு (கோப்புப் படம்)

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு - இந்தியா பதிலடி

Published On 2020-03-07 09:59 GMT   |   Update On 2020-03-07 09:59 GMT
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று பிற்பகல் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
ஜம்மு:

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தார்குன்டி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தந்தனர். கடைசியாக கிடைத்த தகவல்களின்படி, இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News