செய்திகள்
மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 1 கோடி நிதி - உத்தவ் தாக்கரே அறிவிப்பு

Published On 2020-03-07 09:45 GMT   |   Update On 2020-03-07 09:45 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தனது அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
லக்னோ:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் சார்பில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல் மந்திரியாக செயல்பட்டுவருகிறார். 

இந்நிலையில், முதல் மந்திரியாக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி உத்தவ் தாக்கரே அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக இன்று உத்தர பிரதேசம் சென்றார். 

அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, ''நான் கடவுள் ராமரின் ஆசிர்வாதம் கிடைக்க இங்கு வந்துள்ளேன். கடந்த  ஒன்றரை ஆண்டுகளில் நான் அயோத்திக்கு வருவது இது மூன்றாவது முறை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மகாராஷ்டிரா அரசு சார்பாக அல்லாமல் எனது அறக்கட்டளை சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்’’ என்றார்.    

Tags:    

Similar News