செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

தண்டனையை தாமதப்படுத்த புதிய முயற்சி - நிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2020-03-06 10:20 GMT   |   Update On 2020-03-06 13:18 GMT
நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தண்டனையை தாமதப்படுத்தும் விதமாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

கடந்த 2012-ம் ஆண்டு நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 
ஆனால் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, சீராய்வு மனு என தாக்கல் செய்யப்பட்டதால் 3 முறை தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20-ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட நேற்று உத்தரவிட்டது.


இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தண்டனையை தாமதப்படுத்தும் விதமாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், குற்றவாளி முகேஷ் சிங் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News