செய்திகள்
பாராளுமன்றம்

மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையும் 11-ம் தேதி வரை ஒத்திவைப்பு

Published On 2020-03-06 09:55 GMT   |   Update On 2020-03-06 09:55 GMT
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையும் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம்  நடத்த வேண்டும் என்றும், வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி  அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 5வது நாளாக இன்றும் பாராளுமன்றம் முடங்கியது.

மாநிலங்களவையில் இன்று டெல்லி வன்முறை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பியதால் 11-ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதேபோல், மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், டெல்லி வன்முறை தொடர்பாகவும் அக்கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும், காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதனால், மக்களவை 11-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இனி ஹோலி பண்டிகை முடிந்து 11ம் தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும். அப்போது, டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News