செய்திகள்
விபத்தில் சிக்கி உருக்குலைந்த கார்

கர்நாடகாவில் சாலை விபத்து- தமிழக பக்தர்கள் 10 பேர் பலி

Published On 2020-03-06 03:15 GMT   |   Update On 2020-03-06 04:47 GMT
கர்நாடகாவின் தும்கூர் அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர்.
பெங்களூரு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சீக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் ஓசூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தும்கூர் அருகே ஆவரைக்கல் என்ற இடத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளை கடந்து இவர்கள் வந்த கார் மீது மோதியது.

இந்த விபத்தில் ஓசூரைச் சேர்ந்த சவுந்தர்ராஜ் (வயது 48), அவரது மகன் திருஷ்ணு (14), மஞ்சுநாத் (35), அவரது மனைவி தனுஜா (26), ரத்தினம்மா (60), மாலாஸ்ரீ (4), ஒரு வயது குழந்தை ஷோத்தன், சரளா (32), ராஜேந்திரா (27), கவுரம்மா (55)ஆகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இந்த காரில் வந்த சுவேதா, அன்சுயா, மாலா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து தும்கூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வந்த கார் மீது மோதிய காரில் வந்த பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமணன், சந்திகா, மது ஆகிய 3 பேரும் பலியானார்கள். இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து காரணமாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் இறந்ததால் சீக்கனப்பள்ளி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
Tags:    

Similar News