செய்திகள்
பாராளுமன்றம்

தமிழக எம்.பி உள்பட 7 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்

Published On 2020-03-05 11:09 GMT   |   Update On 2020-03-05 11:09 GMT
மாணிக் தாகூர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க சபாநாயகர் ஓம் பிர்லா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் பட்ஜெட் தொடரில் சபாநாயகர் பொறுப்பில் இருந்த ரமாதேவி கையில் இருந்த காகிதங்களை காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் கிழித்தெறிந்தனர். இதில் தமிழக எம்.பி. மாணிக் தாகூரும் ஒருவர்.

இதற்கிடையே, அவைத்தலைவரிடம் வரம்புமீறி நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில், மாணிக் தாகூர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க சபாநாயகர் ஓம் பிர்லா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மக்களவையில்  அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக் தாகூர், பிரதாபன், கவுரவ் கோகோய், டீன் குரியகோஸ், ராஜ்மோகன் உன்னிதன், பென்னி பெஹ்னான், குர்ஜித் சிங் ஆஜ்லா ஆகியோரை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று சஸ்பெண்ட் செய்தார். 7 எம்.பி.க்களும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கபட்டு உள்ளது.
Tags:    

Similar News