செய்திகள்
இஸ்ரோ

தொழில்நுட்ப கோளாறால் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைப்பு

Published On 2020-03-04 10:58 GMT   |   Update On 2020-03-04 10:58 GMT
ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-எப்10 என்ற ராக்கெட் மூலம் நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று பகல் 3 மணி அளவில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. கோளாறு சரிசெய்யப்பட்டதும் விண்ணில் ஏவப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News