செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

கடுமையாக தாக்கும் போராட்டக்காரர்கள் - தப்பி செல்லும் போலீசாரின் வீடியோ வலைதளங்களில் வைரல்

Published On 2020-02-28 07:19 GMT   |   Update On 2020-02-28 07:19 GMT
போராட்டக்காரர்களின் கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போராட்டக்களத்தை விட்டு போலீசார் விரைந்து வெளியேறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



மூன்று மாதங்களுக்கு முன் அகமதாபாத்தில் எடுக்கப்பட்ட வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராட்டக்களத்தை விட்டு போலீஸ் வாகனங்கள் வேகமாக வெளியேறும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

வைரல் வீடியோவை நெட்டிசன்கள், ‘அவர்கள் காஷ்மீர் நிலவரத்தை டெல்லிக்கு கொண்டு வந்துவிட்டனர். அவர்கள் கற்களை எறியவில்லை, இந்தியாவை உடைக்கின்றனர்,’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவை உற்று நோக்கும் போது, வீடியோ எடுக்கப்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் குஜராத்தி மொழியில் பெயர் பலகைகள் காணப்படுகிறது. அந்த வகையில் வைரல் வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பின் வீடியோவில் கடையின் பெயரை இணையத்தில் தேடிய போது, அது அகமதாபாத்தில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.



அகமதாபாத் போலீஸ் மீது தாக்குதல் என இணையத்தில் தேடியபோது, இதே வீடியோ டிசம்பர் 19, 2019 அன்று ட்விட்டர் பதிவு ஒன்று காணக்கிடைத்தது. அதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு போலீசார் தாக்கப்பட்டதோடு, போலீசார் வாகனங்களும் சேதமடைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வைரல் வீடியோ டெல்லியில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News