செய்திகள்
உயிரிழந்த குருவாயூர் கோவில் யானை

குருவாயூர் கோவில் யானை இறந்தது- ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி

Published On 2020-02-28 03:15 GMT   |   Update On 2020-02-28 03:15 GMT
கேரள மாநிலம் குருவாயூர் கோவில் யானை வயது முதிர்வு காரணமாக இறந்ததையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
எர்ணாகுளம்:

கேரள மாநிலம் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பத்மநாபன் என்ற 80 வயதான யானை இருந்து வந்தது. கடந்த 66 ஆண்டுகளாக குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்துக்கு பத்மநாபன் யானை பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த யானையை ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரால் கடந்த 1954-ம் ஆண்டு கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. வயது முதிர்வு காரணமாக பத்மநாபன் யானை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது.

யானைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எர்ணாகுளத்தில் புதைக்கப்பட்டது.

Tags:    

Similar News