செய்திகள்
டிரம்ப், பிரதமர் மோடி

‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை 4½ கோடி பேர் பார்த்தனர்: ஆய்வு நிறுவனம் தகவல்

Published On 2020-02-28 02:18 GMT   |   Update On 2020-02-28 02:18 GMT
180-க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை 4.60 கோடி பேர் கண்டுகளித்திருப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வு கவுன்சில் (பார்க்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
புதுடெல்லி :

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோருடன் கடந்த 24-ந் தேதி ஆமதாபாத் வந்தார். அங்கு புதிதாக கட்டப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நேரில் கலந்து கொண்டு டிரம்ப், மோடி உரையை கேட்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த அபாரமான விருந்தோம்பலை தானும், மெலனியாவும் எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என்று தெரிவித்தார்.

‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி 180-க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்கள் மூலம் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் 4.60 கோடி பேர் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை கண்டுகளித்திருப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வு கவுன்சில் (பார்க்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News