செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை நிறுத்த வங்கிகளுக்கு உத்தரவா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

Published On 2020-02-27 22:24 GMT   |   Update On 2020-02-27 22:24 GMT
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி:

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கு பதிலாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏ.டி.எம்.களில் இந்த நோட்டுகளே அதிக அளவில் கிடைத்து வந்தன. ஆனால், நாளடைவில் இதை அச்சடிப்பது குறைக்கப்பட்டது.



ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கிடைத்த பொதுமக்கள், சில்லறை கிடைக்காமல் தவித்தனர். சில்லறைக்கு வங்கிகளையே அணுகினர். இதனால், ஏ.டி.எம்.களில் இனிமேல் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைக்கப்போவதில்லை என்று வங்கிகள் அறிவித்தன. இருப்பினும், அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

அதே சமயத்தில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல் பரவியது. பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நான் அறிந்தவரை, ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை” என்று கூறினார்.
Tags:    

Similar News