செய்திகள்
கோப்பு படம்

குடியுரிமை போராட்டத்தை அவமதித்து சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியீடு - கேரளாவில் வாலிபர் கைது

Published On 2020-02-27 06:25 GMT   |   Update On 2020-02-27 06:25 GMT
குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தை அவமதித்து சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியீட்ட கேரளா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

பெரும் பதட்டம் நிலவி வரும் நிலையில் கேரள மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுபவர்களை கொச்சைபடுத்தி அவமதிக்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அறிந்த அட்டப்பாடி முக்காலி பகுதியை சேர்ந்த மாணவர் அமைப்பினர் மத ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் மற்றும் ஆன்-லைன் பதிவை நீக்கி, அதனை வெளியிட்ட நபரை கைதுசெய்ய வேண்டும் என்று அகழி ஏ.எஸ்.பி. மற்றும் பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அகழி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலக்காடு படிஞ்சாரிகரையை சேர்ந்த ஸ்ரீஜித் ரவீந்திரன் (வயது 24) என்பரை கைது செய்தனர்.
Tags:    

Similar News