செய்திகள்
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ்

டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

Published On 2020-02-26 09:18 GMT   |   Update On 2020-02-26 09:18 GMT
கலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இதில் 20 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள், வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்தநிலையில் கலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ்  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது கவலையையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐ.நா.சபை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும். பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாட்டை காக்க வேண்டும். டெல்லியில் ஏற்பட்டுள்ள கலவரம் தொடர்பாக நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News