செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக தாஜ் மகால் வாட்டர் வாஷ் செய்யப்பட்டதா?

Published On 2020-02-25 06:49 GMT   |   Update On 2020-02-25 06:49 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை காரணமாக தாஜ் மகால் வாட்டர் வாஷ் செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.



இரண்டு நாள் பயணமாக நேற்று (பிப்ரவரி 24) இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அகமதாபாத்தில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோருடன் விமானத்தில் தாஜ்மகால் சென்று தாஜ்மகாலின் அழகை ரசித்தவாறே புகைப்படமும், செல்ஃபி படங்களும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், டிரம்ப் வருகைக்கு முன் தாஜ் மகால் கட்டிடங்கள் முழுவதும் தண்ணீர் பீய்த்து அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. எனினும், வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை இணையத்தில் தேடிய போது, அதில் இருப்பது தாஜ் மகாலின் மாதிரி கட்டிடம் என்பது தெரியவந்துள்ளது.


மேலே உள்ள புகைப்படம் 1 மாதிரி தாஜ் மகால் கட்டிடம் மற்றும் புகைப்படம் 2 உண்மையான தாஜ் மகால் புகைப்படம் 

தாஜ் மகால் போன்று காட்சியளிக்கும் இந்த மாதிரி கட்டிடம் போபாலில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. வைரல் வீடியோவை உற்று நோக்கும் போது, உண்மையில் தாஜ் மகால் அருகில் உள்ள தரையிலும் வீடியோவில் உள்ள தரையிலும் வித்தியாசத்தை பார்க்க முடியும்.

அந்த வகையில், டிரம்ப் வருகைக்காக வாட்டர் வாஷ் செய்யப்பட்டதாக வைரல் வீடியோவில் காட்டப்படும் கட்டிடம் ஆக்ராவில் உள்ள உண்மையான தாஜ் மகால் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News