செய்திகள்
கால்நடைகள் பலி

உத்தரபிரதேசத்தில் ஒரே ஆண்டில் 9,261 கால்நடைகள் பலி

Published On 2020-02-24 22:48 GMT   |   Update On 2020-02-24 22:48 GMT
உத்தரபிரதேசத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரத்து 261 கால்நடைகள் இறந்து விட்டதாக மாநில கால்நடைத்துறை மந்திரி லட்சுமீர் நாராயாண் சவுத்ரி தெரிவித்தார்.
லக்னோ:

“உத்தரபிரதேசத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரத்து 261 கால்நடைகள் இறந்து இருக்கின்றன. அவை அனைத்தும் இயற்கையாக இறந்ததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை” என்று மாநில கால்நடைத்துறை மந்திரி லட்சுமீர் நாராயாண் சவுத்ரி தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுஷ்மா படேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த உறுப்பினருமான ராம் கோவிந்த் சவுத்ரி குறுக்கிட்டு ‘கால்நடைகள் இறப்பை பிரேத பரிசோதனை செய்யாமலே இயற்கை மரணம் என்று அரசு எவ்வாறு கண்டறிந்தது?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மந்திரி, பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டதுடன், கால்நடைகள் சாவில் சந்தேகங்கள் கிளம்பினால் அதுபற்றி நிரூபிக்கப்படும் என்றும் கூறினார்.
Tags:    

Similar News