செய்திகள்
டெல்லியில் நேற்று நடைபெற்ற வன்முறை

டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்

Published On 2020-02-24 19:24 GMT   |   Update On 2020-02-24 19:24 GMT
டெல்லியில் சிஏஏ-வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டங்களின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியின் ஜாபர்பாத், பஜன்புரா, சந்த்பாத், யமுனா விஹார் மற்றும் மஜ்பூர் பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. 

இந்த போராட்டங்களின் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

''தங்கள் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை மக்கள் மீது திணிக்க முற்பட்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கும் சக்திகளுக்கு காந்தியின் பூமியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலும் இடமில்லை’’ 

டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 



''இந்த விவகாரம் தொடர்பாக நான் துணைநிலை ஆளுநரிடம் பேசியுள்ளேன். அவர் கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பிவைக்க உத்திரவாதம் வழங்கியுள்ளார். வன்முறையை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். மக்கள் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வன்முறை மூலம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது’’

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில்,

'' டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொந்தரவு அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனத்திற்கு உரியது. அமைதி முறையிலான போராட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான அடையாளங்கள் ஆனால் வன்முறை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. என்ன விதமான ஆத்திரம் இருந்தாலும் டெல்லி மக்கள் கட்டுப்பாடு, இரக்கம் மற்றும் புரிதலுடன் செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன்’’  

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News