செய்திகள்
இல்டிஜா முப்தி

வெளிநாட்டவர் வந்தால் மட்டுமே காந்தியின் மரபு நினைவுகூறப்படுகிறது - இல்டிஜா முப்தி

Published On 2020-02-24 14:07 GMT   |   Update On 2020-02-24 14:07 GMT
அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் 8 மில்லியன் காஷ்மீர் மக்கள் உள்ளனர், ஆனால் அரசோ அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையில் மும்முரமாக உள்ளது என மெஹ்பூபா முப்தியின் மகள் இல்டிஜா கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது குடும்பத்தாருடன் வந்துள்ள டிரம்பிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உரையாற்றிய டிரம்ப் இந்தியாவின் ஒற்றுமையயும், பிரதமர் மோடியின் செயல்களையும் பாராட்டினார். டிரம்ப் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு சுமார் ரூ.100 கோடி செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், டெல்லி பற்றி எரிகிறது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் 8 மில்லியன் காஷ்மீர் மக்கள் உள்ளனர், ஆனால் அரசோ அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையில் மும்முரமாக உள்ளது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி கூறியுள்ளார்.

‘வெளிநாட்டு தலைவர்கள் எவரேனும் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை புரிந்தால் மட்டுமே மகாத்மா காந்தியின் மரபு நினைவுகூறப்படுகிறது. அவரது மதிப்பீடுகள் மறக்கப்பட்டன. தலைநகர் டெல்லி பற்றி எரிகிறது. 8 மில்லியன் காஷ்மீர் மக்கள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஆனால் அரசோ அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையில் மும்முரமாக உள்ளது’, என இல்டிஜா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News