செய்திகள்
ராம்சங்கர் ராஜ்பார்

ரூ.120 கோடி மதிப்புள்ள ரெயில்வே நிலம் தனியாருக்கு ரூ.53 கோடிக்கு விற்பனை - ராஜ்பார் குற்றச்சாட்டு

Published On 2020-02-24 11:55 GMT   |   Update On 2020-02-24 11:55 GMT
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக ரூ.100 கோடி செலவிடப்பட்டது நாட்டின் நலனுக்காக இல்லை என சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம்சங்கர் ராஜ்பார் குற்றம் சாட்டினார்.
லக்னோ:

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது வருகைக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது. டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி செல்லும் பாதையில் உள்ள குடிசைகளை மறைப்பதற்கு, சுமார் 7 கி.மீ தொலைவிற்கு 4 அடி உயர சுவர் எழுப்பப்பட்டது. டிரம்பின் இந்திய வருகை ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக ரூ.100 கோடி செலவிடப்பட்டது நாட்டின் நலனுக்காக இல்லை என சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம்சங்கர் ராஜ்பார் குற்றச்சாட்டினார்.

‘அமெரிக்க தயாரிப்புகளுக்கான சுங்க வரி குறைக்கப்படுவதற்கும், அவர்களின் பால், விவசாய மற்றும் மருத்துவ பொருட்களுக்கு இந்திய சந்தைகளை பாதுகாப்பதற்கும் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்பதற்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவிடுவது நாட்டை ஏமாற்றுவது போன்றது. 

லக்னோவின் ஐஸ்பாக் நகரில் உள்ள ரூ.120 கோடி மதிப்புள்ள ரெயில்வே நிலம், ஒரு தனியார் பில்டருக்கு ரூ .53 கோடிக்கு மட்டுமே வழங்கப்பட்டது, புது தில்லியின் அசோக் விஹாரில் உள்ள 10.76 ஹெக்டேர் பரப்பளவிலான ரெயில்வே நிலம் கோத்ரேஜ் குழுமத்திற்கு மலிவான விலையில் வழங்கப்பட்டது. இது நாட்டு மக்களை ஏமாற்றுவது போன்றதாகும்.

நாடு கடுமையான பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றைக் கடந்து வரும் நிலையில், இந்திய சந்தையை ஆக்கிரமிக்க விரும்பும் அந்த நபரின் வரவேற்புக்காக அரசாங்கம் 100 கோடி ரூபாய் செலவழிக்கிறது’ என ராஜ்பர் குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News