செய்திகள்
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்றும் டிரம்ப்

இந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்

Published On 2020-02-24 09:11 GMT   |   Update On 2020-02-24 12:48 GMT
இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களை வழங்கும் வகையில், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன.
அகமதாபாத்:

அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:-

இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியாவிற்கு தர இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன. 


இந்தியாவும், அமெரிக்காவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பை அமெரிக்கா ஒடுக்கி உள்ளது. நட்புடன் வந்தால் வரவேற்போம், பயங்கரவாதிகளுக்கு எங்களது எல்லை மூடப்பட்டிருக்கும்.

தெற்காசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்கா தயாராக உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News