செய்திகள்
போராட்டத்தால் போலீசார் குவிப்பு

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் இருபிரிவினருக்கு இடையே கல்வீசி மோதல்: போலீஸ் கண்ணீர் புகை வீச்சு

Published On 2020-02-23 12:25 GMT   |   Update On 2020-02-23 12:25 GMT
டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு பிரிவிருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் அதிகரிக்க இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது.

இதனால் இருதரப்பினருக்கு இடையிலான மோதலை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடாக சீலாம்பூர் - மஜ்பூர் இடையில் இருக்கும் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் வாசல்களை மூடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News