செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் ரத்து?

Published On 2020-02-22 09:18 GMT   |   Update On 2020-02-22 09:18 GMT
திருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கண்ணாடி பாட்டில்களை கையாளும் போது, உடைந்து விடும் அபாயமும், உடைந்த கண்ணாடி துண்டுகள் பக்தர்களின் கால்களில் குத்தி ரத்தகாயத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அஞ்சப்படுகிறது.

அத்துடன் உடைந்த கண்ணாடி துண்டுகளை அகற்றும் போது, துப்புரவு ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது. இத்திட்டத்துக்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பி உள்ளது. ஆகையால் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்காக கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News