செய்திகள்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண்ணுக்கு நக்சல்களுடன் தொடர்பு- கர்நாடக முதல்வர் தகவல்

Published On 2020-02-21 08:49 GMT   |   Update On 2020-02-21 08:49 GMT
பெங்களூரு போராட்டத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண்ணுக்கு, நக்சல்களுடன் தொடர்பு இருந்ததாக கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட இளம்பெண்ணால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அந்த மாணவி மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:-



கைது செய்யப்பட்டுள்ள அந்த மாணவி போன்றவர்களுக்குப் பின்னால் இருக்கும் அமைப்புகள் மற்றும் இதுபோன்ற செயலை வளர்க்கும் அமைப்புகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், இதுபோன்ற விஷயங்கள் முடிவுக்கு வராது. இத்தகைய  செயல்களின் மூலம், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. அந்த மாணவிக்குப் பின்னால் இருக்கும் அமைப்புகளை விசாரித்தால், பல தகவல்கள் வெளியே வரும்.

அந்த மாணவிக்கு கடந்த காலங்களில் நக்சல்களுடன் தொடர்பு இருந்தது என்பது தெளிவாகிறது. அவருக்கு எதிராகவும், அவருக்கு பின்னால் இருக்கும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News