செய்திகள்
ஏர் இந்தியா விமானம்

சீனாவுக்கு விமான போக்குவரத்து தடை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு - ஏர் இந்தியா நடவடிக்கை

Published On 2020-02-20 19:51 GMT   |   Update On 2020-02-20 19:51 GMT
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவுடனான விமான போக்குவரத்து தடையை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்து உள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலிகளை வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் சீனாவுடனான விமான தொடர்பை ரத்து செய்துள்ளன. அந்தவகையில் இந்தியாவும் சீனாவுக்கு செல்லும் பல விமானங்களை ரத்து செய்து உள்ளது.குறிப்பாக மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி- ஷாங்காய் இடையிலான 6 வாராந்திர விமானங்களை கடந்த மாதம் 31-ந்தேதி முதல் கடந்த 14-ந்தேதி வரை ரத்து செய்திருந்தது. எனினும் 15-ந்தேதிக்கு பிறகும் போக்குவரத்து மீண்டும் தொடங்கவில்லை.

இதைப்போல டெல்லி-ஹாங்காங் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.இந்த நிலையில் மேற்படி 2 வழித்தடங்களிலும் அமலில் இருக்கும் விமான போக்குவரத்து தடையை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்து உள்ளது. முன்னதாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற தனியார் விமான நிறுவனங்களும் சீனாவுக்கு விமானங்களை இயக்க தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News