செய்திகள்
மெலனியா டிரம்ப்

டெல்லி அரசு பள்ளிக்கு செல்ல விரும்பும் மெலனியா டிரம்ப்

Published On 2020-02-20 15:20 GMT   |   Update On 2020-02-20 15:20 GMT
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா, தங்களது இந்திய வருகையின் போது டெல்லி அரசு பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடி மகிழ விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - மெலனியா தம்பதியினர் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.

தலைநகர் டெல்லி, குஜராத்தின் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார். அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக அவர் பயணம் செய்கிறார். 

இந்நிலையில், அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா, தனது பயணத்தின் இரண்டாவது நாளில் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று வகுப்பறைகளைப் பார்வையிட விரும்புகிறார் என தகவல்கள் வெளியாகின.

அப்போது, சில மணி நேரங்கள் அங்குள்ள பள்ளி குழந்தைகளுடன் உரையாடி பொழுதைக் கழிக்கவும் மெலனியா விரும்புகிறார் என கூறப்படுகிறது.

டெல்லி வரும் மெலனியா டிரம்பை, முதல் மந்திரி அரவிந்த் கெஜரிவால், துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்க உள்ளனர்.

டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களை அமெரிக்க அதிபரின் மனைவி சந்திக்க உள்ளது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News