செய்திகள்
கோப்பு படம்

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தேர்தல் கமி‌ஷனுக்கு அதிகாரம் - மத்திய அரசு

Published On 2020-02-19 07:25 GMT   |   Update On 2020-02-19 07:25 GMT
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அதிகாரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

வாக்காளர் பட்டியலில் போலியாக பெயர் சேர்த்தல் மற்றும் தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

கடந்த 2015-ம் ஆண்டில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 32 கோடி ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. எனவே அந்த பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.



இதுகுறித்த கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா, சட்டத்துறை செயலாளர் நாராயண் ராஜூ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெற குறிப்பாணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் சட்டத்துறை மிக தீவிரமாக உள்ளது.
Tags:    

Similar News