செய்திகள்
மங்கள் கேவத்தை நேரில் சந்தித்த பிரதமர் மோடி

மகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்‌ஷா ஓட்டுநரை சந்தித்தார் மோடி

Published On 2020-02-18 08:42 GMT   |   Update On 2020-02-18 08:42 GMT
மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்த சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத் என்பவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நெகிழ்ந்தார்.
வாரணாசி:

மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத், தன் மகளின் திருமணத்தில் பங்கேற்கும்படி மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். ஆனால் திருமண விழாவிற்கு மோடி வரவில்லை. வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டார். அப்போது மங்கள் கேவத்தை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவரது ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார். தூய்மை இந்தியா இயக்கத்துக்காக மங்கள் கேவத் அளித்த பங்களிப்புக்காக, பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தினால் மங்கள் கேவத் தன் கிராமத்தில் கங்கை ஆற்றங்கரையை தானே சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினார்.

மகள் திருமணத்துக்கு பிரதமர் மோடி வராவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பியது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று மங்கள் கேவத் ஏற்கனவே கூறியிருந்தார்.
Tags:    

Similar News