செய்திகள்
கைதான 3 மாணவர்களை படத்தில் காணலாம்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேச்சு - காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் கைது

Published On 2020-02-17 08:37 GMT   |   Update On 2020-02-17 08:37 GMT
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய காஷ்மீர் மாணவர்கள் 3 பேரை கர்நாடக போலீசார் இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
ஹூப்ளி:

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது.

இந்த கல்லூரியில் படிக்கும் காஷ்மீரை சேர்ந்த 3 மாணவிகள் புல்வாமா தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக வலை தளத்தில் வெளியிட்டு இருந்தன. அதில் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தும், புல்வாமா சம்பவத்தை வரவேற்றும் இருந்தனர்.

இதை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்களான அமீர், பாஷித், தலேப் ஆகிய 3 பேரையும் தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

கைதான 3 மாணவர்களும் கிரிமினல் சட்ட குற்றப்பிரிவு 169-ன்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

3 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் அமைப்பு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நெருக்கடி காரணமாக காஷ்மீர் மாணவர்கள் 3 பேரையும் கர்நாடக போலீசார் இன்று மீண்டும் கைது செய்தனர்.

இது தொடர்பாக தார்வார் போலீஸ் அதிகாரி திலீப் கூறும் போது “காஷ்மீர் மாணவர்கள் 3 பேரும் மீண்டும் கைதாகி உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள்.

3 மாணவர்களை ஜாமீனில் விடுவித்தது தொடர்பாக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலாக் போலீசாரை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதே போல உள்துறை மந்திரி பசவராஜுவும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேசியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே மாணவர்கள் 3 பேரும் மீண்டும் கைது ஆனார்கள்.
Tags:    

Similar News