செய்திகள்
சதானந்தகவுடா

பிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் - சதானந்தகவுடா சொல்கிறார்

Published On 2020-02-16 20:34 GMT   |   Update On 2020-02-16 20:34 GMT
பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து அரசியல்வாதிகளின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் என மத்திய மந்திரி சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
சிக்பள்ளாப்பூர்:

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுனில் மத்திய மந்திரி சதானந்தகவுடா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பா.ஜனதா அரசு, வருமான வரித்துறையை கையில் வைத்துக்கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்துவதாக குற்றம்சாட்டுகிறார்கள். இது தவறான கருத்து. இனி பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து அரசியல்வாதிகளின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகள் பலர் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து தேர்தலில் வெற்றிபெற்று விடுகிறார்கள். அப்படி வெற்றிபெறுபவர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்.

இது நாட்டில் எல்லா பகுதிகளிலும் நடைபெறுவதில்லை. ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே நடக்கிறது. அதில் கர்நாடகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது. அதில் பா.ஜனதாவும் சேர்ந்துவிட்டது. அரசியலில் 25 சதவீதம் பேர் மட்டுமே நல்லவர்கள். மீதி 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள் ஆவர். இவ்வாறு மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
Tags:    

Similar News