செய்திகள்
தீனதயாள் உபாத்யாயா சிலையை வணங்கிய பிரதமர் மோடி

வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published On 2020-02-16 08:32 GMT   |   Update On 2020-02-16 08:57 GMT
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நிறுவப்பட்டுள்ள பா.ஜ.க. நிறுவனர் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியாகும். பிரதமர் மோடி 16-ம் தேதி வாரணாசிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை வாரணாசி சென்றார். அவரை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, வாரணாசியில் அமைக்கப்பட்டு உள்ள பண்டிட் தீனதயாள உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

மேலும், அங்கு நிறுவப்பட்டு உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர பஞ்ச லோக சிலையை திறந்து வைத்தார். அவரது சிலையை வணங்கி மரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News