செய்திகள்
ஆதார், பான் கார்டு,

மார்ச் 31-ந்தேதிக்கு முன்பாக ‘பான் கார்டு’டன் ஆதாரை இணைக்க வேண்டும் - மத்திய அரசு

Published On 2020-02-15 20:30 GMT   |   Update On 2020-02-15 20:30 GMT
வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், அந்த பான் எண் செயலற்றதாகி விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

‘பான்’ என்னும் வருமான வரி கணக்கு நிரந்தர எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.

இது தொடர்பாக நிதி சட்டம் 2017, குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், அந்த பான் எண் செல்லாது என கூறுகிறது. ஆனால் இந்த விதியை மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாற்றி இருக்கிறது.

அதாவது, வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், அந்த பான் எண் செயலற்றதாகி விடும் என மத்திய அரசு மாற்றியது.

தற்போது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதாருடன் இணைப்பதற்கு மார்ச் 31-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இதுவரை ஆதாருடன் இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து விட வேண்டும்.

அப்படி மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், அவர்களின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் செயலற்றதாக ஆக்கப்பட்டு விடும். இவ்வாறு செயலற்றதாக ஆக்கி விட்டால், அந்த வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை கொண்டு எந்தவொரு நிதி பரிமாற்றமும் செய்ய முடியாமல் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News