செய்திகள்
மீரட் ஐ.ஜி. பிரவீன் குமார்

மீரட் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டாரா? -ஐ.ஜி. விளக்கம்

Published On 2020-02-15 08:14 GMT   |   Update On 2020-02-15 08:14 GMT
மீரட் மாணவி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்தும், விசாரணையில் கிடைத்த தகவல் குறித்தும் காவல்துறை ஐஜி விளக்கம் அளித்தார்.
மீரட்:

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படிக்கும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் இருந்து புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், அவரை தேடி வந்தனர். 

செல்போன் சிக்னலை வைத்து, மாணவியை புலந்த்சாகர் மாவட்டம் சியானா அருகே மீட்டனர். முகத்தில் பலத்த காயமடைந்திருந்த அவர் மீரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை அபாய கட்டத்தில் இருந்து மீண்டு, தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கல்லூரியில் இருந்து வீடு திரும்பியபோது, 4 பேர் கொண்ட கும்பல் அந்த தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, மீரட் மண்டல ஐ.ஜி. பிரவீன் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து, இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார். இது கடத்தல் வழக்கோ, கற்பழிப்பு வழக்கோ இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

‘மாணவியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை. கல்லூரியில் தன்னுடன் படிக்கும் ஒருவருடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது’ என்றும் ஐஜி கூறினார்.
Tags:    

Similar News