செய்திகள்
முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் மந்திரிகளுக்கு ‘ஐ-பேடு’

Published On 2020-02-13 23:10 GMT   |   Update On 2020-02-13 23:10 GMT
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் மந்திரிகள் அனைவருக்கும் ‘ஐ-பேடு’ வழங்க உள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அவர் தனது அரசு நிர்வாகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்த விரும்பி, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் தனது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள மந்திரிகள் அனைவருக்கும் ‘ஐ-பேடு’ வழங்க உள்ளார். மந்திரிசபை கூட்டத்தில் காகித பயன்பாடு ஒழிக்கப்படுகிறது. ஐ-பேடுகளைத்தான் மந்திரிகள் பயன்படுத்த வேண்டும்.

இதை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அலுவலகம் ஒரு அறிக்கையில் நேற்று தெரிவித்தது. அங்கு எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே ‘டேப்லட்’ (கையடக்க கணினி) வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்த சிரமப்படுகிற எம்.எல்.ஏ.களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Tags:    

Similar News