செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை - ராகுல் காந்தி

Published On 2020-02-12 17:04 GMT   |   Update On 2020-02-12 17:04 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த  வைரஸ் பரவியுள்ளது. இந்த  வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.  

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது என சீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

கொரோனா வைரஸ் நமது மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் அதிதீவிர அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனால், இந்த அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

வைரஸ் பரவுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News