செய்திகள்
சோனியா காந்தி

டெல்லி காங்கிரசுக்கு தற்காலிக தலைவர் நியமனம் - சோனியா காந்தி அறிவிப்பு

Published On 2020-02-12 15:33 GMT   |   Update On 2020-02-12 15:33 GMT
டெல்லி காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக ஷக்தி சின் கோஹிலை நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் 70 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த 8–ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது.

டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஒரு சீட்கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, டெல்லி சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர் பிசி சாக்கோ ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக ஷக்தி சின் கோஹிலை நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிசி சாக்கோ, சுபாஷ் சோப்ராவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், டெல்லி காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக ஷக்தி சின் கோஹிலை நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News