செய்திகள்
மருத்துவ கருவி

மருத்துவ கருவிகளும் மருந்துகளாகவே கருதப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-02-11 21:17 GMT   |   Update On 2020-02-11 21:17 GMT
மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகள் அனைத்தும் மருந்துகளாகவே கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

அனைத்து மருத்துவ கருவிகளும் குறிப்பிட்ட தரத்துடனும், ஆற்றல் மிக்கதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகள் அனைத்தும் மருந்துகளாகவே கருதப்படும். மருந்து மற்றும் அழகூட்டும் பொருட்களுக்கான சட்டத்தின் 3-வது பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. கருவிகள், டயாலிசிஸ் கருவி, செல்லப்பிராணிகளுக்கான கருவிகள், எக்ஸ்ரே கருவி, எலும்பு மஜ்ஜையை பிரிக்கும் கருவி உள்ளிட்டவை இதில் அடங்கும். மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களும் அதன் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பொறுப்பாகும்.
Tags:    

Similar News