செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

வெற்றியை நெருங்கும் கெஜ்ரிவால்... மணீஷ் சிசோடியா பின்தங்கினார்

Published On 2020-02-11 07:09 GMT   |   Update On 2020-02-11 08:15 GMT
டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றியை நெருங்கி உள்ளார். அதேசமயம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பின்தங்கினார்.
புதுடெல்லி:

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மூன்றாவது முறையாக அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உள்ளது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் அவரது வெற்றி உறுதியாகி உள்ளது. அதேசமயம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பத்பர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் நெகியைவிட  2000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். 



போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் (நஜப்கர்), சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் (ஷாகூர் பாஸ்டி), தொழிலாளர் நலத்துறை மந்திரி கோபால் ராய் (பாபர்பூர்), குடிமைப்பொருள் வழங்கல் துறை மந்திரி இம்ரான் உசைன் (பாலிமாரன்) ஆகியோரும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

2015ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News