செய்திகள்
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள்

டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்பு... ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டம்

Published On 2020-02-11 04:23 GMT   |   Update On 2020-02-11 04:23 GMT
புதுடெல்லியில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில் அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பதால் அக்கட்சியினர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லி மாநிலத்தில் 70 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க  36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதைவிட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது. காலை 9.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 51 இடங்களிலும், பாஜக 19 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தன.



ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் அந்த கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளை கைப்பற்றும் சூழல் உள்ளது. மூன்றாவது முறையாக தலைநகரில் ஆட்சியை பிடிக்க உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாவகே ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தை பலூன்களாலும், கட்அவுட்டுகளாலும் அலங்கரித்து வைத்திருந்தனர். முன்னிலை நிலவரம் வெளியாகத் தொடங்கியதும் கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News