செய்திகள்
காஷ்மீர் எல்லையில் தாக்குதல்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-வது நாளாக தாக்குதல்

Published On 2020-02-09 23:18 GMT   |   Update On 2020-02-09 23:18 GMT
பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 2-வது நாளாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மெந்தர் பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள்.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் தேக்வார் பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டபடியும் தாக்குதல் நடத்தினார்கள். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜீவ் சிங்(வயது 36) என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 2-வது நாளாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மெந்தர் பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நேற்று நண்பகல் 12.30 மணியளவில் தொடங்கிய துப்பாக்கி சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இந்த சண்டையில் இந்திய தரப்பில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
Tags:    

Similar News